election2021

img

நந்திகிராம் வாக்குச்சாவடியில் புகுந்து மம்தா கூப்பாடு... மேற்குவங்கம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது...

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் கடந்த தேர்தல்களில் இடதுசாரிகளின் வெற்றியை தடுப்பதற்காக வாக்குச் சாவடிகளை கைப்பற்றவும், கணக்கின்றி கள்ள ஓட்டுகள் பதிவுசெய்யவும் ஆயுதமேந்திய குண்டர்களை யும், சமூக விரோதிகளையும் களத்தில் இறக்கிய திரிணாமுல் கட்சியின் தலைவரும் முதலமைச்சரு மான மம்தா பானர்ஜி, இப்போது நந்திகிராம் தொகுதியில் தனக்கு எதிராககள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்படுவ தாக குய்யோ முறையோ என்று குமுறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்ட சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1 வியாழனன்று நடைபெற்றது. மம்தா பானர்ஜிபோட்டியிடும் நந்திகிராம் உள்பட 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. வாக்குப் பதிவையொட்டி நந்திகிராமில் தங்கியிருந்த மம்தா பானர்ஜி, மதியம் ஒரு மணியளவில் இத்தொகுதிக்கு உட்பட்ட போயல்மக்தாப் ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரச்சனை எழுந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்குசென்றார். வாக்குச் சாவடிக்குள் நுழைந்து அங்கேயே அமர்ந்து கொண்டார். வாக்குச் சாவடி அலுவலர்களை பார்த்து, கள்ள ஓட்டு போடுவதற்கு அனுமதிப்பதாகவும், அதைஅனுமதிக்கமாட்டேன் என்றும் அரைமணி நேரத்திற்கு மேலாக கூப்பாடு போட்ட வண்ணம் இருந்தார்.முன்னதாக வாக்குச் சாவடிக்குள்திரிணாமுல் மற்றும் பாஜக நபர்களுக்கு இடையே மோதல் எழுந்ததாகவும் பாதுகாப்பு படையினர் வந்துதடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அங்கிருந்து கிளம்ப மறுத்த மம்தாவிடம் அதிகாரிகள் சமாதானம்பேசினர். பின்னர் அவர் தேர்தல்ஆணையத்திடம் புகார்அளிப்பதாக கூறி சென்றார். நந்திகிராம் உள்பட பல்வேறு தொகுதிகளில் மோதல்கள் உள்ளிட்ட சிறு சம்பவங்கள் பதிவானதாக வங்க ஊடகங்கள் தெரிவிக் கின்றன. வங்கத்தை போலவே அசாமிலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 39 தொகுதிகளில் நடைபெற்றது.