election2021

img

திரிணாமுல் தலைவரின் வீட்டில் இவிஎம் இயந்திரங்கள் பறிமுதல்... தேர்தல் துணை அதிகாரி சஸ்பெண்ட்...

கொல்கத்தா:
அசாம் மாநில இரண்டாம் கட்டத்தேர்தலில், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாஜக வேட்பாளரின் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், மறுதேர்தலுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் உலுபீரியா பகுதியில் வசிக்கும் திரிணாமுல் கட்சித் தலைவர் கவுதம் கோஷின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்குவங்க மாநிலம், உலுபீரியாஉத்தரில் தேர்தல் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த தபன் சர்க்கார் என்பவர், கவுதம் கோஷின் உறவினர் என்றும், தேர்தல் பணிக்காக உலுபீரியா உத்தருக்கு சென்றிருந்த அவர், இரவில் தூங்குவதற்காக 4 வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் கவுதம் கோஷின் வீட்டிற்குச் சென்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனிடையே, தேர்தல் துணை அதிகாரி தபன் சர்க்காரை பணியிடை நீக்கம்செய்த தேர்தல் ஆணையம்; அவரிடமிருந்த 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. மேலும் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.