புதுதில்லி:
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு, மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, இடதுசாரிகள் - காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, பாஜக தலைமையில் மற்றொரு அணி மொத்தம் 3 பிரதான அணிகள் களத்தில் மோதுகின்றன. இந்தக்கூட்டணிகள் சார்பில் பிரச்சாரங் களும் துவங்கி விட்டன.இதனிடையே, ஏபிபி - சிஎன்எக்ஸ் நிறுவனங்கள், மேற்குவங்கத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது தொடர்பான தங்களின் இரண்டாவது சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன.இதில் முதற்கட்ட சர்வே முடிவுகளைக் காட்டிலும், இரண்டாவதுசர்வேயில், பாஜகவுக்கான வாக்கு சதவிகிதம் குறைந்திருப் பது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 41.53 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று ‘ஏபிபி - சிஎன்எக்ஸ்’ 2-ஆவது சர்வே கூறுகிறது. இது முதல் சர்வேயில் கூறப்பட்டதை விட 0.44 சதவிகித வாக்குகள் கூடுதல் ஆகும்.
அதேபோல பாஜகவுக்கு 34 சதவிகிதம் வாக்குகள் கிடைக் கும் என ‘ஏபிபி - சிஎன்எக்ஸ்’ நிறுவனத்தின் 2-ஆவது சர்வே கூறுகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் சர்வே முடிவுகளில் பாஜக-வுக்கு கிடைக்கும் கூறப்பட்டதை விட 3 சதவிகித வாக்குகள் குறைவாகும்.மேலும், இடதுசாரிக் கட்சிகள் - காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு 19 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என தற்போதைய சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இது முதல் சர்வே முடிவுகளில் கூறப்பட்டதை விட 2 சதவிகிதம் வாக்குகள் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.