election2021

img

சிலிண்டர் விலையே போதும், உங்களை தோற்கடிக்க...

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அவரது கட்சி வெற்றி பெறுவதற்கு ஆறு இலவச சிலிண்டர்களே போதும் எனக் கூறியுள்ளார். அத்தோடு அவர் நிற்கவில்லை. என்னைப் பற்றி அதிகபட்சம் மீம்ஸ் போடுவார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை எனவும் கூறியுள்ளார்.

பத்து வருடங்களாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவோ, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோ உழைப்பாளி மக்கள் விடும் கண்ணீரையும், புலம்பலையும் நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.அமைச்சர் அவர்களே, உங்களது சகக் கூட்டாளியான பாஜக கேஸ் சிலிண்டர் மானியத்தை படிப்படியாக சுருக்கிவிட்டதே. அது உங்களுக்குத் தெரிந்திருந்த நியாயமில்லை.“ஆறு சிலிண்டர்களே” வெற்றி பெறப் போதும் என்கிறீர்களே.ஒரு வருடத்தில் உங்கள் கூட்டாளியின் சாதனையைப் பாருங்கள் கேஸ் விலை: 2020-மே ரூ.580.50, ஜூன் ரூ.645.50, ஜூலை ரூ.648.50, ஆகஸ்ட் ரூ.649, செப்டம்பர் ரூ.649, அக்டோபர் ரூ.649, நவம்பர் ரூ.649, டிசம்பர் ரூ.749, 2021-ஜனவரி ரூ.749, பிப்ரவரி  ரூ.824, மார்ச் ரூ.874.2020 மே மாதம் ரூ.580.50-க்கு விற்ற சிலிண்டர் மார்ச் மாதம் ரூ.874-க்கு விற்கப்படுகிறது. அதாவது 11 மாத காலத்தில் ரூ.293.50 உயர்வு. இதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.2014 ஆம் ஆண்டு ரூ.410-க்கு விற்கப்பட்ட சிலிண்டர். 2021-மார்ச் 14 ஆம் தேதி ரூ.874-க்கு விற்கப்படுகிறது.இலவச சிலிண்டர் என்று மக்களை ஏமாற்ற முடியாது அமைச்சரே.