மதுரை:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் தாகம் தீர்க்க மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், இளநீர், மோர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி நல்லவர், வல்லவர், ராசியானவர். அவரது ஆட்சி காலத்தில்தான் வெயில் காலத்திலும் (ஞாயிறன்று) மழை கொட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தான் “டாப்” மற்றவர்கள் எல்லாம் “டூப்” அவரை மீண்டும் முதல்வராக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்” என்றார்.