மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், பெரம்பூர் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து எம்.எம்.டி.ஏ காலனி, வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.