நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாகப்பட்டினம் இ ஜீ எஸ் பிள்ளை கல்லூரியில் நடைபெற்றது.
கீழ்வேளூர் தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் நாகைமாலி சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அஇஅதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வடிவேல் இராவணன் போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.
பல்வேறு தரப்பில் இருந்தும் நாகைமாலிக்கு ஆதரவு பெருகி வந்தது. உழைக்கும் மக்களின் ஒப்பற்ற சின்னமாம் சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தை மக்கள் அமோக ஆதரவுடன் வரவேற்றனர். செல்லும் இடமெல்லாம் செங்கொடி ஏந்தி மக்கள் ஆதரவு தந்தனர்.கூட்டணி கட்சி தலைவர்களும் தொண்டர்களும் இரவு பகல் பாராமல், வெற்றிக்காக உழைத்தனர்.இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாகைமாலி மகத்தான வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் (பாம க) தோல்வியை தழுவினார். பதிவான வாக்குகள் மொத்தம் 142995. நாகைமாலிக்கு 67988 வாக்குகளும். வடிவேல் ராவணனுக்கு 51003 வாக்குகளும் கிடைத்தன.16985 வாக்கு வித்தியாசத்தில் நாகைமாலி வெற்றி வாகை சூடினார். நாம்தமிழர் கட்சிக்கு15173 வாக்கு களும். மக்கள் நீதி மய்யத்திற்கு 2906 வாக்குகளும், அமமுகவுக்கு 2503 வாக்குகளும் கிடைத்தன.