election2021

img

கதர்துறை அமைச்சருக்கு கல்தா... சிவகங்கையில் அதிமுக போராட்டம்....

சிவகங்கை:
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சரான சிவகங்கையைச் சேர்ந்த பாஸ்கரனுக்கு அதிமுக தலைமை தொகுதி வழங்காமல் ‘‘கல்தா’’ கொடுத்துவிட்டது.

இதனால் விரக்தியில் உள்ள அவர் தனது ஆதரவாளர்களிடம் எனக்காக போராட்டம் நடத்துங்கள்எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அவரதுஆதரவாளர்கள் பாஸ்கரனின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்தனர். சிவகங்கை அரண்மனை வாசலில் திரண்ட அவரது ஆதரவாளர்கள் பாஸ்கரனுக்கு சீட் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். சிலர் தீக்குளிப்பு முயற்சிகளையும் நடத்திக்காட்டினர்.