ஒன்றிய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி, ஏப்.11- சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் கே.கோபு, ஒன்றியச் செய லாளர் டி.வி.காரல் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் தலைமை வகித்தார். சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினர் ராபர்ட் ப்ரைஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராதா கண்டன உரையாற்றினார்.