டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் மழையூர் கிராம மக்கள் கோரிக்கை
துக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடியை அடுத்த மழையூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “மழையூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை (கடை எண்:6608) புதுக்கோட்டை – கறம்பக்குடி பிரதான சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ளது. மேற்படி பள்ளி யில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். இந்த மதுக்கடைக்கு செல்பவர்களால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த கடைக்கு முன்பாக ஒரு இளைஞர் வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. எனவே, மேற்படி மதுபானக் கடையை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென” கூறப்பட்டுள்ளது.