election2021

img

அக்கரைப்பேட்டை மீனவ சமூக மக்களின் அன்பில் நாகைமாலி...

கீழ்வேளூர்:
திமுக தலைமையிலான கீழ்வேளூர்சட்டமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் நாகைமாலி வெள்ளியன்று அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கிராமத்திற்குள் நுழைந்த அவரை அக்கரைப்பேட்டை மீனவ சொந்தங்கள், அன்போடும், பாசத்தோடும் வெற்றி திலகமிட்டு, பொன்னாடை போர்த்தி, உற்சாகமாக வரவேற்று, ‘நீங்கள்தான் எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்’ என்று மனதார வாழ்த்தி எழுச்சியோடு வரவேற்ற னர். திமுக நாகை மாவட்டச் செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் பி.டி.பகு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பாலசந்திர போஸ், திமுக மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன், சிபிஐ மாவட்ட கவுன்சிலர் சரபோஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மீனவ மக்களின் உற்றதோழனாய் என்றென்றும் பணியாற்று வேன் என உறுதியளித்து நாகை மாலி வாக்கு சேகரித்தார்.