election2021

img

மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மத்திய பாஜக அரசு சூழ்ச்சி... சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு....

திருவனந்தபுரம்:
மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டும் உறுதி, பாஜக-வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜக சூழ்ச்சி வலைகளைப் பின்னுவதாகவும் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 21-ஆம் தேதி முடிவடையும் நிலையில், அந்த பதவிகளுக்கு ஏப்ரல் 12 அன்று தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.ஆனால், தற்போது திடீரென அந்தஅறிவிப்பை தானாகவே தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. காரணங்கள் எதையும் தேர்தல் ஆணையம் கூறவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மத்திய பாஜகஅரசு கொடுத்த அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையம் இவ்வாறு செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு, தேர்தல் ஆணையஅதிகாரிகளை நேரிலேயே சந்தித்து இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினார். முறைப்படி ஆட்சேபணைக் கடிதம் ஒன்றையும் அளித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஓய்வுபெறும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவு கூறும் நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கு மாறாகசெயல்பட்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். எனினும் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக இன்னும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், தேர்தல் ஆணையசெயல்பாட்டுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளமாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்திருந்த அவர், “கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை மாநிலங்களவைத் தேர்தலை நடத்தக் கூடாது என மத்தியில் ஆளும் பாஜக விரும்புகிறது. ஏனெனில் கேரளாவில் காலியாகும் 3 மாநிலங்களவை இடங்களில் 2-ஐ ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்திருக்கிறது. இதை மாற்றுவதற்கு பாஜக சூழ்ச்சிசெய்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், எந்தவித அழுத்தங்களுக்கு அடிபணியாமலும் இருக்க வேண்டும்.

ஆனால், மாநிலங்களவைத் தேர்தலைதள்ளி வைத்திருப்பது வினோதமாகவும், சந்தேகம் அளிக்கும் வகையிலும் உள்ளது. இந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும் என்று கூறியுள்ள யெச்சூரி, “கேரளாவில் முன் னெப்போதும் இல்லாதவகையில் கடந்த 5 ஆண்டுகளில் தேசிய பேரிடர்கள் பல நிகழ்ந்தபோதும் மாநில அரசு அனைத்து நிலைகளிலும் சிறப் பாக செயலாற்றியது. இதற்காக மத்திய அரசின் கடுமையான விரோதத்தை எதிர்கொண்டது. கேரள மாநிலத்துக்கு அற்பமான நிதியை வழங்கிமத்திய பாஜக அரசு பழிவாங்கியது. மதத்தையும், நம்பிக்கையையும் அரசியல் மற்றும் அரசில் இருந்து வேறுபடுத்துவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம். இதனாலும் பாஜக-வால் இடதுசாரிகள் குறிவைக்கப்படுகின்றனர்” என்று யெச்சூரிகுறிப்பிட்டுள்ளார்.