election2021

img

அசாமில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய சீனியர் தலைவர்கள்... சீட் கிடைக்காத 22 பேர் சுயேச்சையாக போட்டி...

திஸ்பூர்:
அசாமில் மொத்தம் 126 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில்,முதற்கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 47 தொகுதிகளில் சனிக்கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமார் 76.09 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, எஞ்சியுள்ள 79 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6 ஆகியதேதிகளில் மேலும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள் ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இம்முறை இடதுசாரிகள், போடோலாந்து மக்கள் முன்னணி, அகில இந்தியஐக்கிய ஜனநாயக முன்னணி என வலுவான கூட்டணியை உருவாக்கி பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரம்பத்தில், பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருந்த அசாம் மாநிலம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கூட்டணியின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இதனிடையே, பாஜகவில் சீட் கிடைக்காத அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது, பாஜக கூட்டணிக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.இதற்காக, முன்னாள் சபாநாயகர் திலீப் குமார் பவுல் உள்ளிட்ட 15 தலைவர்களை ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கிய பாஜக, தற்போது சுயேட்சையாக போட்டியிடும் மேலும் 7 பேரை வெளியேற்றியுள்ளது.