election-2019

img

திருப்பூர் வெறுப்பூராக யார் பொறுப்பு?

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் இன்று கவலைக்கிடமாக மாறி இருக்கிறது. திருப்பூர் பாதிக்கப்படுவது இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல, கொங்கு மண்டலத்துக்கு மட்டுமல்ல, தென் மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் ஊர். படிப்புக்கும், உழைப்புக்கும், திறமைக்கும்ஏற்ற வாய்ப்பை வழங்கக்கூடிய ஊர். இங்கு மட்டுமல்ல, தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை கொடுக்கும் திருப்பூர் நிலை கவலையளிப்பதாக மாறி இருக்கிறது.நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு வரால்தான் திருப்பூர் தன் பெருமை, செல்வாக்கு, செல்வத்தை இழந்து நிற்கிறது. இன்று பலர் வேலை இழந்து வருத்தத்துடன் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். 2014 ஆம் ஆண்டு இதே மோடி தேர்தல் பிரச்சா ரத்துக்குவந்தபோது திருப்பூரின் பின்னலாடை வர்த்தகத்தை 1 லட்சம் கோடியாக உயர்த்திக்காட்டுவதாகச் சொன்னார். ஆனால் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இங்கு தேர்தல் பிரச்சார த்துக்கு வந்த மோடி இந்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆட்சியில் 1 லட்சம் கோடியாக திருப்பூர் வர்த்தகத்தை உயர்த்திவிட்டேன் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகச் சொல்ல முடிந்ததா? 2013 செப்டம்பரில் திருச்சியில் மோடியைச் சந்திப்போம் என இங்கிருந்த தொழில் துறையினரை அழைத்துச் சென்றவர்களாவது இதைப் பற்றிச் சொல்கிறார்களா? மோடியால் பதில் சொல்லவே முடியாது. மோடியிடம் அழைத்துச் சென்றவர்களும் பதில் சொல்ல முடியாது.திருப்பூர் பாதிக்கப்பட்டதில் மோடிக்கு மட்டுமல்ல; அவருக்கு ஆதரவு அளித்த எடப்பாடி அரசுக்கும் பங்குண்டு. ஜாடிக் கேற்ற மூடி என்ற பழமொழிக்கு ஏற்பமோடிக்கேற்ற பாடி, எடப்பாடி. குட்டி சிங்கப்பூர் திருப்பூரை சீரழித்தது மோடியும்,அவருக்குத் துணைபோன எடப்பாடியும் தான்.2016 நவம்பர் இரவில் பணமதிப்பு நீக்கநடவடிக்கையால் திருப்பூர் வர்த்தகம், சிறு, குறு தொழில் துறையினர் பாதிக்கப் பட்டனர். அவர்களை நம்பிஇருந்த தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்திருந்த சிறுவணிகர்கள், வியாபாரிகள், லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தையும் சிதைத்துவிட்டார்கள். நரேந்திர மோடிதான் இதற்குக் காரணம். வேலைவாய்ப்பு இல்லாமல் திருப்பூர் வெறுப்பூர் என்ற நிலைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது.

;