election-2019

சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதி -திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

சிதம்பரம், ஏப்.5-சிதம்பரம்(தனி) மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல். திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அவர், காட்டுமன்னார்கோவில், சிறீமுஷ்ணம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் சோழதரம், பாளைங்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.திருமாவளவன் செல்லும் கிராமங்கள் தோறும் மேலதாளங்கள் முழங்க மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

;