election-2019

img

கரூருக்கு தம்பிதுரை என்ன செய்தார்?

கரூர், ஏப்.5-


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங் கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்து வெள்ளிக்கிழமை கரூர், திருமாநிலையூரில் நடை பெற்ற பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது; அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரைக்கு கடைசிவரை சீட்டு கிடைக்குமா, கிடைக்காத என்ற சந்தேகம்அவருக்கு மட்டுமின்றி, அவரது கட்சியினருக்கும் இருந்தது. ஏனென்றால் அதிமுகவினருக்கு அவர்எந்த அணியில் இருக்கிறார் என்ற குழப்பம். பாஜகதமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை எனக் கூறிவிமர்சித்தவர் தம்பிதுரை. அண்மையில் நடந்த மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது கூட, இடைக்கால நிதிநிலை அறிக்கை பாஜகவின் தேர்தல் அறிக்கை, விவசாயத்திற்கு ரூ.6 ஆயிரம் என அறிவித்திருப்பது போதுமானதல்ல, ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை மத்தியஅரசு குறைத்து விட்டது, மாநில அரசு மத்திய அர சிடம் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது.



புயல் நிவாரண நிதியை முழுமையாகத் தரவில்லை எனக் கூறியவர் தம்பிதுரை. அப்படிப்பட்டவர் தான் இப்போது மோடிக்கு ஓட்டு கேட்கிறார். இப்போது தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுச் செல்லும் தம்பிதுரையை மக்கள் கேள்வி கேட்கஆரம்பித்து விட்டனர். அவரை விரட்டும் காட்சியும்,எனக்கு ஓட்டுப் போட்டால் போடுங்கள் இல்லா விட்டால் போங்கள் என்று அவர் கூறும் காட்சியும் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கிறது. மோடியை மிரட்டி என்னென்ன திட்டங்கள் கரூருக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என தம்பிதுரையால் சொல்ல முடியுமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலர் கே.சி.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணிச்செயலாளர் சின்னசாமி, மதிமுக மாவட்ட செய லாளர் கபினி சிதம்பரம், திமுக வழக்குரைஞர் மணிராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சின்னசாமி, பேங்க் கே.சுப்ரமணியன், ஸ்டீபன்பாபு, கொமதேக நிர்வாகி கள் விசா ம.சண்முகம், விசிக கட்சி ஜெயராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டகூட்டணி கட்சி நிர்வாகிகள், திரளாக பங்கேற்றனர்.

;