election-2019

img

திமுக கூட்டணியில் 5 வேட்பாளர்கள் படைப்பாளிகள்

தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் இங்கே பங்கேற்று இருக்கிறார்கள். இப்படி வந்து பங்கேற்க எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இவ்வளவு காலம் நாம் சம்பாதித்த சொத்து என இதைக்குறிப்பிடலாம். ஆட்சியாளர்களின் கடந்த கால செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மிகுந்த வெக்கையோடு இவர்கள் இங்கே இணைந்து இருகிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களில் 5 படைப்பாளிகளை இந்த அணி நிறுத்தி இருக்கிறது. ஒரு கட்டற்ற ஆர்வத்தோடு எல்லோரும் இங்கே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் இருந்து வந்து பங்கெடுத்து இருக்கும் அனைத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள், தமுஎகச தோழர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வேட்பாளர் சு.வெங்கடேசன் ஏற்புரையில்…