election-2019

img

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சி

தஞ்சை, ஏப்.6-


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிவேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டி தர் சாலையில் பரப்புரைக் கூட்டம்வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ பேசியதாவது: இந்த தேர்தல் இந்திய துணைக்கண்டத்தின் எதிர்காலப் போக்கு எப்படி என்பதை தீர்மானிக்கக் கூடியது ஆகும். பிரதமர் மோடி எதேச்சதிகார தொனியில் ஒவ்வொரு நாளும் நம்மை அச்சுறுத்தும் கருத்தை கூறி வருகிறார். இந்து பயங்கர வாதம் என்ற சொல்லை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பயன்படுத்தி பேசியுள்ளார். அப்படியொரு சிந்த னை இந்தியாவில் திமுக கூட் டணி, பல்வேறு மாநிலக் கட்சிகள்,பொதுவுடமைக் கட்சிகளுக்கு இருந்தது இல்லை. அதுபோன்ற கருத்தை கூறியதும் இல்லை. ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகள் படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டதை யாரும்மறக்க முடியாது. இவர்களுடைய ஆட்சி மீண்டும் வந்தால் மறுபடி யும் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ரத்தக்களரி ஏற்படும் நிலை உருவாகும். ஜிஎஸ்டியை விட மிகப்பெரிய ஆபத்தாக ஆன்லைன் வர்த்தகம், ஊக வணிக முறையை கொண்டு வருவர். இதனால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படு வார்கள். கார்ப்பரேட் கம்பெனி களுக்கு பட்டுக் கம்பளம் விரித்து டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேரகன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், திக தலைவர் அமர்சிங், விடுதலை சிறுத்தை கள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் சொக்காரவி, மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார், மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சி சிமியோன் சேவியர் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;