election-2019

img

புதுக்கோட்டையில் காலிச் சேர்களைப் பார்த்து பரப்புரை நிகழ்த்திய அமித்ஷா

புதுக்கோட்டை, ஏப்.2-சிவங்கங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்காக காலிச் சேர்களைப் பார்த்து தேர்தல் பரப்புரை நிகழ்த்தி சாதனை படைத்தார் பாரதிய ஜனதா கட்சியின் அகிலஇந்தியத் தலைவர் அமித்ஷா.தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் தூத்துக்குடியில் பிரச்சா ரத்தைத் தொடங்கிய அமித்ஷா, மாலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச்.ராஜாவுக்காக புதுக் கோட்டை மாவட்டம் லேனா விலக்குஎன்ற பகுதியில் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் திருமயம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால், போடப்பட்டிருந்த இருக்கைகளில் பாதியளவுகூட அவர்களால் ஆட்களை அழைத்துவரமுடியவில்லை. அப்படி அழை த்து வந்தவர்களை இருக்கைகளில் உட்கார வைப்பதற்கு கட்சியினர் படாதபாடுபட்டனர்.கூட்டத்தைத் தக்க வைப்பதற்காகநிகழ்ச்சி தொகுப்பாளராக மாறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி மைக் முன்பாகத் தோன்றி அமித்ஷா அரை மணி நேரத்தில் வந்து விடு வார், கால் மணி நேரத்தில் வந்து விடுவார்,


பத்து நிமிடந்தான், ஐந்து நிமிடம்தான் என நடனக் குழுவினரின் பாடல்களுக்கு இடையிடையே மைக்கில் பேசிக் கொண்டே இருந்தார். எவ்வளவு அவர் கத்தியும்கூட்டத்தை தக்க வைக்க முடிய வில்லை. கிளம்பிக் கொண்டே இருந்தனர். மொத்தமே நான்கு பேர் தான் சுருக்கமாகப் பேசுவார்கள். ஒருமணி நேரத்துக்குள் கூட்டம் முடிந்து விடும் என கெஞ்சாத குறை யாக அமைச்சரும், கட்சியினரும் பேசிக்கொண்டே இருந்தனர்.ஒருவழியாக அமித்ஷாவும் வந்து சேர்ந்தார். முதல் ஆளாக அமைச்சர்விஜயபாஸ்கர் வரவேற்ரை ஆற்றிக் கொண்டு இருந்த போதே மொத்தக் கூட்டமும் இருக்கைகளை விட்டு எழுந்து கிளம்பின. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமித்ஷா, அமைச்சர் வரவேற்புரையை முடிக்கும் முன்பாகவே மைக் முன்னால் வந்துவிட்டார். வேட்பாளர் என்பதையும் மறந்து எச்.ராஜாவே மொழிபெயர்ப்பில் இறங்கினார். அமித்ஷா பேசும்போது மக்களைப் பார்த்து கும்பிடக்கூட முடியாத பரிதாப நிலைக்கு எச்.ராஜா தள்ளப் பட்டார். பெரும் பகுதியான நாற்காலிகள் காலியாகி விட்டதால் மொழிபெயர்ப்பு உட்பட மொத்தமே 18 நிமிடங்களுக்குள் தனது பேச்சை முடித்துக் கொண்டு அமித்ஷா கோவைக்குக் கிளம்பிவிட்டார்.


பிரச்சாரத்திலும் புதிதாக எந்தக்கருத்தையும் அவர் தெரிவிக்க வில்லை. வழக்கம்போல புல்வாமா தாக்குதல், அதற்கான பதிலடி என்றபல்லவியையும், மக்களக்குப் புரியாத ஒருசில புள்ளி விபரங் களையும் மட்டுமே குறிப்பிட்டார். குறிப்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக் கும், சிவகங்கை தொகுதிக்கும் ஏதாவது வாக்குறுதிகளை அளிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கும், செய்தியாளர் களுக்கும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்தில் இத்தகைய அலங்கோலங்கள் நிகழ்ந்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டஅதிமுகவினர் மற்றும் பாஜகவினரின் முகத்தில் ஈ ஆடவில்லை. தமிழ்நாட்டில் பிஜேபியோடு சேர்ந்த தால் இருந்த செல்வாக்கையும் இழக்க நேரிடுமோ என்று கட்சியினர் ஆதங்கப்பட்டுச் சென்றனர்.

;