election-2019

img

ரபேலால் அலறும் பாஜக-அதிமுக அணி-புத்தகத்தை பறிமுதல் செய்து அராஜகம்

-ரபேல் ஊழலால் அம்பலப் பட்டுள்ள மத்திய பாஜக ஆட்சி யாளர்களும், தமிழகத்தில் அவர் களுடன் கூட்டு வைத்துள்ள அதிமுக ஆட்சியாளர்களும் தேர்தல்பிரச்சாரத்தில் மக்களை எதிர் கொள்ள அஞ்சி வருகின்றனர். இந்நிலையில் ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் விதமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்”என்ற புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக கூறி, புத்தகாலய அலுவலகத்திற்குள் நுழைந்து புத்தகங்களை தேர்தல் அதிகாரி தலைமையில் காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் பெயரில் நடந்த இந்த அராஜகத் திற்கு எதிர்க்கட்சிகள், பத்திரிகை யாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த கடும் கண்டனக் கணைகளால் சற்றுபின்வாங்கிய தேர்தல் அதிகாரிகள், புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என்றும், புத்த கத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கூறினர். இந்நிலையில் திட்டமிட்டபடி செவ்வாயன்று மாலையில் பாரதி புத்தகாலயத்தில் மேற்கண்ட நூல் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.முன்னதாக, பாரதி புத்தகா லயத்தின் சார்பில் “நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல்” புத்தக வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஏப்.2) சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கேரள சமாஜத்தில் நடைபெறுவதாக இருந்தது. காவல்துறையினர் அந்த இடத்தின் உரிமையாளருக்கு, நிகழ்ச்சி நடத்தஅனுமதிக்கக் கூடாது என கெடுபிடிவிதித்ததால், தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந் தது. இந்நிலையில் புத்தகத்தை வெளியிடக் கூடாது எனக் கூறிதேர்தல் பறக்கும் படை அதிகாரியும், காவல் துறையினரும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த 146 புத்தகங்களை பறித்துச் சென்றனர்.


என்.ராம் வெளியிட்டார்



இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங் கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த பத்திரிகையாளர் என்.ராம், தமுஎகச தலைவர்கள் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யாஉள்பட ஏராளமானோர் கடும் கண்ட னக் கணைகளை வெளியிட்டனர்.இந்நிலையில் புத்தகத்தை வெளியிட தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து செவ்வாயன்று மாலையில் அந்த புத்தகத்தை செய்தியாளர்கள் மத்தியில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:தேர்தல் பறக்கும்படை செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது. தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஇந்த புத்தகத்திற்குத் தடை விதிக்கவில்லை. புத்தக வெளியீட்டு விழாவை நடத்திக்கொள்ள லாம். பறிமுதல் செய்யப்பட்ட புத்த கங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று தொலைபேசியில் தெரிவித்தார். பின்னர் அந்த புத்தகங் களை ஒப்படைத்தனர்.சிறிய நிகழ்ச்சியாக நடைபெற விருந்த இந்த புத்தக வெளியீட்டு விழா பெரிய நிகழ்ச்சியாக நடைபெற அரசின் தடையே காரணம்.ரபேல் ஊழல் குறித்து அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். எந்த ஊழலும் நடைபெற வில்லை என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்கிறது. ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் எப்படிப் போடவேண்டும் என்று அரசு வலைத்தளத்தில் சரியாக உள்ளது. ஆனால் நடைமுறையில் மோடி அரசு அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டால் வங்கி உத்தரவாதம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அது இல்லை. மூன்று ராணுவ அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கிறார்கள். ரபேல் போர்விமானங்களுக்கு மோடி அரசு கொடுக்க ஒப்புக் கொண்ட விலை மிக மிக அதிகம்.இவ்வாறு என்.ராம் கூறினார்.



;