election-2019

img

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற மோடி குறுக்கு வழி

திருப்பூர், ஏப். 3 –


மோடியின் வேலையாள் போல் அவருக்குத் துணை போகும் தேர்தல் ஆணையம் பின்னர் ஜனநாயகரீதியாக வேறு விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மத ச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பரா யனை ஆதரித்து ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தன்னாட்சி அமைப்புகளை மோடி மிரட்டி, அச்சுறுத்துகிறார், அவர் களை வேலையாட்களைப் போல் நடத்துகிறார். 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 21 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும்.நீதிமன்றத்தில் தடை இல்லை, வழக்குஇருந்தாலும் தேர்தல் நடத்தலாம். ஆனால் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறார் கள். அங்கு தேர்தல் நடத்தி திமுக வெற்றிபெற்றுவிட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் நிறுத்தி வைத்திருக் கின்றனர். எப்படியும் அங்கும் தேர்தல்அறிவித்துத்தான் தீர வேண்டும்.



அப்படி ஒரு நிலை வந்துவிட்டால் என்னசெய்வது என திட்டமிட்டுத்தான் துரை முருகன் வீட்டில், அலுவலகத்தில் அவரது மகன் கல்லூரியில் காலை முதல்மறுநாள் காலை வரை சோதனை நடத்திஇருக்கிறார்கள். அங்கு சோதனை நடத்திய நேரத்தில் என்ன கண்டுபிடித் தார்கள்? எதுவும் இல்லை என்று போய்விட்டு ஒரு நாள் இடைவெளி விட்டு வந்து யாருடைய வீட்டிலேயோ சோதனை செய்து பணத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். எங்களுக்கு என்ன சந்தேகம் என்றால்அவர்களே பணத்தை கொண்டு வந்துவைத்துவிட்டு இப்படிச் செய்கிறார்களோ என்று நினைக்கிறோம்.இப்போது வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை நிறுத்தப் போவ தாக செய்திகள் வருகின்றன. அந்த தொகுதிக்கு மட்டுமல்ல, அதற்கு உட்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர்,குடியாத்தம் இரண்டு தேர்தலையும் நிறுத்துவது பற்றியும் செய்திகள் வருகின்றன. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம் என இரு தொகுதி களில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கும் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் வீடுகளிலும் சோதனை செய் கிறார்கள். இது திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறது.தேர்தல் ஆணையம் மோடிக்குத்துணை போனால் பின்னால் வேறுவிளைவுகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும். இதை மிரட்டுவதற்காகச் சொல்லவில்லை. ஜனநாயகரீதியாக சொல்கிறோம்.இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தில் வேட்பாளர் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் உரை யாற்றினர். திமுக துணைப்பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல்,மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்பட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.(ந.நி.)