மன்னார்குடி, ஏப்.27-தமிழ் வழியில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நல்ல முதுகலை பாடத் திட்டங்களை புதிய சலுகைகளோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கவி ருக்கிறது. இந்த கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் இந்த பாடத் திட்டங்கள் ப்ளஸ்டு தேர்ச்சியிலிருந்து நேரடியாக ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டங்களாகும்.முதுகலை கணிதம், முதுகலை இயற்பியல், முதுகலை வேதியல், முதுகலை எலக்ட்ரானிக் மீடியா, முதுகலை பயோடெக்னாலஜி, முதுகலை கடல்அறிவியல், முதுகலை சுற்றுச்சூழல் அறிவியல், முதுகலை வணிகவியல் போன்ற முதுகலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை நுழைவுத் தேர்வு இன்றி 6.5.2019 அன்று நடைபெறவிருக்கும் நேரடி கலந்தாய்வில் நடைபெறும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3.5.2019. இதர விபரங்ககள், விண்ண ப்பங்கள் றறற.அளரniஎ.யஉ.in பல்கலை கழக இணையதளத்தில் கிடைக்கும்.இதில் தேர்வு செய்யப்படும் முதல் பத்து மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாதம் தோறும் ரூ.2000 ஊக்கத் தொகை ஐந்தாண்டுக்கு அளிக்கப்படும். பொறியியல் படிக்க வசதியில்லாத நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்விற்கு செல்ல முடியாத ஏழை கிராமப்புற தமிழ்வழி மாணவர்களுக்கு இந்த முதுகலை கல்வித் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு.(நநி)