திருவாரூர், ஏப்.5-
மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணிகட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.செல்வராசு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களைசந்திக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாகை தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசு பனையூர், கோட்டூர், ஆதிச்சபுரம், மழவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்ரபாண்டியம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, புழுதிகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்ற வேட்பாளர் எம்.செல்வராசு, விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும், பெண்களையும், இளைஞர்களையும், வர்த்தகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். வாக்கு சேகரிப்பின் போது மக்கள் மத்தியில் செல்வராசு பேசுகையில், படித்த இளைஞர்களின் வேலை உரிமை பறிபோயுள்ளது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் கொல்லப் படுகிறார்கள்.இந்நிலையை போக்கிட மக்கள்விரோத மோடி ஆட்சியை அகற்றிட,விலைவாசி உயர்வினை கட்டுப் படுத்திட, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திட, விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்விக்கடன பிரச்சினைக்கு தீர்வுகண்டிட, விவசாய தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை உருவாக்கிட, அனைத்து பகுதியினருக்கும் தரமான, சமமான கல்வி, மருத்துவ, வசதிகிடைத்திடவும் தொடர்ந்து போராடுவேன், மேலும் இப்பகுதியில் தொழில்வளம் பெருகிடவும், இளைஞர் களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிவும் புதிதாக தொழிற் பேட்டை(சிப்காட்) தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன்என்றார்.