கும்பகோணம், ஜுன் 11- தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணா நிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு வேலைவாய்ப்பு துறை, தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கும்பகோணம் தாராசுரம் பைபாஸ் சாலை அருகே உள்ள, கே.எஸ்.கே. பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுத்துறை, இயக்குனர் கே.வீர ராகவராவ் வரவேற்புரையாற்றினர். தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழி யன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முகாம் குறித்து விளக்கவுரையாற்றினார். முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் துவக்கி வைத்து, நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பணி ஆணைகளை வழங்கினார். முகாமில் மாநிலங்களவை உறுப்பினரும் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவருமான எஸ்.கல்யாணசுந்தரம், ம யிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் செ.இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் தமிழழகன், மாமன்ற உறுப்பி னர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.