தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களில் பிற்பகல் ஒரு மணி நேர நிலவரப்படி 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெரியகுளத்தில் 32.32 சதவீதம், பெரம்பலூரில் 39.85 சதவீதம், தருமபுரியில் 43.06 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கோளாறு காரணமாக 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 விவிபேட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த வாக்குப்பதிவு நிலவரம் 4 மணிக்கு வெளியாகும்” என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்து 4 முதியவர்கள் உயிரிழந்துள்னர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. குறிப்பிடத்தக்கது.