கோயம்புத்தூர், ஏப்.5 –
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கோவையில் சிறு-குறு தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வரு கிறது. எந்த அரசியலையும் சாராத நாங்கள் இத்தொழிலை மீட்க வேண்டும் என்பதால் கோவை மக்களவை தொகுதியின் திமுக கூட்ட ணியின் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம் என கோவைபம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் (கோப்மா) சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் கோப்மா சங்கநிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோப்மா தலைவர் மணிராஜ் கூறியதாவது: பம்ப்செட் கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. குடிநீர் விநியோ கத்திற்கும் இந்த பொருள் தேவை. இத்தகைய அத்தியாவசிய பொருளுக்கு இரட்டைவரி சுமத்தியிருக்கக் கூடாது. விற்பனைக்கு 18 சதவீதம் வரை விதிக்கப் பட்டுள்ளது. அதோடு, ஜாப் ஒர்க்தொழிலுக்கும் 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்துஇதுவரை ஜாப் ஒர்க் தொழிலுக்கு வரியே இல்லை. இது கூலித்தொ ழில் வகையை சேர்ந்தது. இத்த கைய முரண்பாடான வரிவிதிப்பு கொள்கையால், பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. பல தொழில் முனைவோர்கள் தெருவில் தள்ளுவண்டி கடைபோட்டு இட்லி, வடை, போண்டா வியாபாரத்திற்கு சென்றுள்ள சோகம் கோவையில் நடைபெற்றுள்ளது. எங்கிருந்தாலும் கோவைக்கு சென்றால் வேலை கிடைக்கும் என்கிற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் கோவையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள னர். இந்த வரியை 5 சதவீதமாககுறைக்க வேண்டும் என்றும், ஜாப்ஒர்க்கிற்கு வரி விதிக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதி களுக்கும் கோரிக்கை விடுத்தோம்.ஆனால், எங்கள் கோரிக்கையை யாரும் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. நாங்கள் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்கள் அமைப்பில் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை சார்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் இன்று சிறு,குறு தொழில் இருக்கும் நிலை யில் இதனை பாதுகாக்க வேண்டும்என்கிற நிர்ப்பந்தம் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் எங்களின் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக எங்களை அழைத்து 6 முறை எங்களோடு எங்கள் தொழிலின் இன்றைய நிலை, நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து அக்கறையோடு கேட்டது. மேலும் இந்த கட்சியும், இந்த கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனும்தான், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி கொடுத்துள்ளனர். இந்த வாக்குறுதியை நாங்கள் நம்புகிறோம். ஆகவே இந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் சங்கத்தினர் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது கிரைண்டர் உற்பத்தி முனைவோர், வார்ப்பட தொழில்முனைவோர் உள்ளிட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்று பி.ஆர்.நடராஜனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.