கோவை,
பல்லடம் அருகே 3.80 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.80 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் வங்கி ஏ.டி.எம்-ல் நிரப்புவதற்காக அந்த பணம் காரில் கொண்டுவரப்பட்டது என தகவல் தெரியவந்துள்ளது