திருப்போரூர், ஏப்.3-
ஊழல் புதைகுழியில் சிக்கியுள்ள மத்திய-மாநில அரசுகளை மக்கள்தூக்கி எரிய வேண்டும் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோதிருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள்விடுத்தார்.காஞ்சிபுரம்(தனி) மக்களவை தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் க.செல்வம், எல்.இதயவர்மன் ஆகியோருக்கு வாக்குகள் கோரி திருப்போரூரில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஊனை.பார்த்திபன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா. திமுக மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மாவட்டத் தலைவர்கள் வாக்கு சேகரித்துப் பேசினர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மதிமுகவின் மாநில பொதுச் செயலாளர் வைகோ,“ மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு திட்டத்தைத் தீட்டியவர்கள் பாஜக அமைச்சர்கள். அவ்வாறு அணைக் கட்டினால் தஞ்சை மாவட்டத்தில் 25ஆயிரம் ஏக்கர் நிலம் கருகிப்போகும். விவசாயிகள் பிச்சைபாத்திரம் ஏந்தும் நிலை ஏற்படும். பிறகு, அந்த நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு விற்பனை செய்திடும். இதன் மூலம் பலகோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்” என்றார்.கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் ரத்தத்தை ஏற்றிய அரசு, கெட்ட ரத்தத்தை ஏற்றி 15 பெண்களை கொலைசெய்த அரசு இந்த அரசு. ஊழல்புதையில் சிக்கியுள்ளது. மணல்,குட்கா, கல்வி, பொதுப் பணித்துறையில் சாலை அமைப்பதில் ஊழல், ரபேல்பேர ஊழல், பாதுகாப்புத் துறையில் ஊழல், என மத்திய மாநில அரசுகள் ஊழலில் சிக்கியுள்ளன. இந்தஅரசுகளை மக்கள் தூக்கி எரியவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.