சவுக்கி தாரு சவுக்கி தாரு
சவுக்கியமா இல்லை பாரு
பெரிய காரு பிளசர் காரு
எங்கு எங்கோ பறக்கிறாரு
ஓட்டுப் போட்ட மக்களெல்லாம் கடைசியில கடன் காரு
உங்களுக்கு ஒட்டுப் போட்ட மக்களெல்லாம்
கடைசியில கடன் காரு
(சவுக்கி)
பதினைஞ்சு லட்சம் எதிர்பார்த்தோம்
பாஸ் புக்க காணோம்
வேலை வாய்ப்பை எதிர்பார்த்தோம்
வீதிக்கு வந்தது சனம்
நதிகளை இணைப்பேன்னு சொன்னீக
கடைசீல மீத்தேன் எடுக்கிற திட்டமுங்க
பொட்டிபுரம் ரொம்ப பாவமுங்க
நீயூட்ரினோன்னு சொன்னாலே நடுங்குதுங்க
(சவுக்கி)
மனுசனை பிரிச்சு வச்சீங்க
சாதியை நல்லா வளர்த்தீங்க
பழைய திட்டத்தை தூசி தட்டி
புதுசா அடிக்கல்
போட்டீக
இது மனுசன் இருக்கிற நாடாங்க?
வெள்ளாட்டு கூட்ட முன்னா நெனச்சீக
பயந்து போயி கெடக்கோமுங்க - நீங்க அடிக்கிற அந்தர் பல்டி தாங்கலிங்க
(சவுக்கி)