election-2019

img

பாஜகவுக்காக பிரச்சாரம் இல்லை

பத்தனம்திட்டை, மார்ச் 31-மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வதில்லை என பந்தளம் அரச குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரண்மனை நிர்வாக குழு உறுப்பினர் சசிகுமார் வர்மா ஏசிநெட் மலையாள செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க மத்திய அரசு சட்டப்பூர்வமான தலையீடு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.பத்தனம்திட்டை பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனும் அக்கட்சியின் தலைவர்களும் பந்தளம் அரண்மனைக்கு சென்று ஆதரவு கேட்டனர். தங்களது நிலைப்பாட்டை அரண்மனை நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்த பிறகும் அரண்மனையின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாக அவர்களாகவே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.