election-2019

img

பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு ரூ.147 கோடியாம்

தில்லியில் பாஜக சார்பில் போட்டியிடும் கிரிக்கெட்வீரர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு ரூ147கோடி என்பது தெரியவந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார். அதில் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 4 காரும் ஒரு பைக்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவரது மனைவி நடாஷா கம்பீருக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளராக கவுதம் காம்பீர் திகழ்கிறார். அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

காங்கிரஸ் சார்பில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கின் சொத்து மதிப்பு 12.14 கோடி என்று அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 3முறை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தன்னிடம் மொத்தம் 4.92 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.