திருச்சிராப்பள்ளி, ஏப்.3-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில், இந்த பகுதியில் விவசாயப் பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கநடவடிக்கை எடுப்பேன். உத்தமர்சீலியில் கூகூர்-கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கவும், தடுப்பணை கட்டவும் உரிய நடவடிக்கை எடுப்பேன். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, கல்வி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவேன். இந்த தொகுதியில் 5 மருத்துவமனைகள் அமைத்து சுற்றுப்புற கிராம மக்கள் மருத்துவ வசதி பெற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், பழநிசாமி, புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த், லால்குடி ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் கலந்து கொண்டனர்.