election-2019

ரபேலுல மாட்டினான்டா மச்சான்...

பல்லவி


`ரபேலுல மாட்டினான்டா மச்சான்

வாக்களிச்ச மக்களுக்கு

வாழ்க்க முழுசும் வறுமை வச்சான்

எல்லாத்தையும் சொரண்டிப்புட்டான்

இன்னும் என்ன மிச்சம் வச்சான் - ஆனா

அதானிக்கும் அம்பானிக்கும்

இந்தியாவை எழுதி வச்சான்

போடு… போடு…

ரபேலுல மாட்டினான்டா மச்சான்

உப்பைத் தின்ன கூட்டம் - அது

தண்ணி குடிச்சி மாட்டும்


சரணம் 1


உத்தமன்னுச் சொல்லிச் சொல்லி

உலகம் முழுக்க அள்ளி உட்டான்

ஊழலை எதிர்க்கறேன்னு

ராமதேவ ஏவி விட்டான்

அன்னா ஹசாரேவைக்

காட்டிக் காட்டி வேஷம் போட்டான் - இப்போ

பூமியிலே செஞ்சிப்புட்டா

போதாது அப்படீன்னு

ஆகாயத்தில் செய்யுறானே ஊழலு

அதுக்கு வச்ச பேருதானே ….. ரபேலு

உப்பைத் தின்ன கூட்டம் - அது

தண்ணி குடிச்சி மாட்டும்


சரணம் 2


லேடி பேரைச் சொல்லிச் சொல்லி

கோட்டைக்குள்ளே குந்திக்கிட்டான்

மோடி பேரைச் சொல்லி இப்போ

முகமூடியை மாத்திக்கிட்டான்

முகமூடிக்குப் பின்னாலொரு

மூஞ்சூரையும் சேத்துக்கிட்டான் - இப்போ

தமிழகத்தைப் போட்டுத்தள்ள

தாறுமாறாத் திட்டம்போட்டு

பாதாளத்தில் எடுக்கப் போவது மீத்தேனாம் - மோடி

பக்கத்துல இதுக ரெண்டும் சாத்தானாம்

உப்பைத் தின்ன கூட்டம் - அது

தண்ணி குடிச்சி மாட்டும்

சரணம் 3