election-2019

வேலைவாய்ப்பே முதல் பிரச்சனை

ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார். இந்தியாவில் பல தேர்தல்களில் பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்துள்ளார்கள். பிரதமர் யார் என்பதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வர். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளும் இடம்பெற சிறப்பான வாய்ப்புள்ளது.பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும். ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாகப் பரவியுள்ளது.ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பிரச்சாரத்தின் போது நாடு வளமாக வேண்டும் என்றால் மோடி பிரதமரானல் தான் முடியும் என இருவரும் மாறி மாறி புகழாரம் செய்கின்றனர். இதனால் அவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என்று கூறிவிட முடியாது.பாஜக ஐந்தாண்டுகளில் செய்துள்ள நல்ல திட்டம் என்று ஒன்றுமே கிடையாது, எங்களின் 100 நாள் வேலைத் திட்டத்தையும், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் நிறுத்தாமல் இருந்துள்ளதே அவர்கள் செய்த நல்ல விஷயம் ஆகும்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முதலாவதாக வேலைவாய்ப்பு குறித்ததுதான் தெரிவித்துள்ளோம். வேலையின்றி இளைஞர்கள் தவித்துவருகின்றனர். மற்றொரு புறம் நான்கு லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பி நான்கு லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றி வைப்போம்.


மதுரையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டு செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதிலிருந்து...