election-2019

img

சந்தேகம் சாமிக்கண்ணு - பிரதமர் மோடி

பிரதமர் மோடி :- அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சியை முன்னெடுத்தது பாஜக.


ச.சா - முதல் 100 பெரிய பணக்காரங்களச் சொல்றாரோ..??


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :- ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க பிரதமர் மோடியே காரணம்.


ச.சா - ஒட்டுமொத்த தமிழ்நாடே எந்திரிச்சு நின்னு போராடுனது காரணம் இல்லியா..??


தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு :- இதுவரையில் 3 ஆயிரத்து 839 தேர்தல் நெறிமுறை மீறல்கள் வழக்குகள் பதிவு.


ச.சா - எப்போ நடவடிக்கை எடுப்பீங்க..??


தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- கட்சியைத் தொடங்கியவர்களின் பாதையில் வழுவாமல் பாஜக பயணிக்கிறது.


ச.சா - தொடங்குன அத்வானியோட நிலைமை பரிதாபமா இருக்குதே..??

;