election-2019

img

அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை : சத்யபிரதா சாஹூ

தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். 

புயல் தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தலாமா என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தகவல் அளித்துள்ளார். இதனிடையே தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் புயல் ஆய்வு கூட்டம் நடத்த தடையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். 

 புயல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு புயலால் பாதிப்பு உள்ளதா என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 


;