election-2019

சிபிஎம் தேர்தல் அறிக்கை 2019

குழந்தைகள்/சிறுவர் நலன்

18 வயதுக்குக் கீழ்பட்டவர்களை குழந்தை/சிறுவர் என வகைப்படுத்துவது

போதுமான அங்கன்வாடி மையங்களை உருவாக்குவதுn சிறார் உழைப்பு ஒழிப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, சிறார் உழைப்பைக் கொல்லைப்புற வழியாக அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்வது

குழந்தைகள் கடத்தப்படுவது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஆகிய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட தேவையான சட்டங்கள் உட்பட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது; காணாமல் போகும் குழந்தை/சிறுமியரைத் தேட திறன் மிக்க நடவடிக்கைகள் எடுப்பது; போக்சோ சட்டத்தைக் உறுதியாக அமலாக்குவது

மாணவியர், பெண்கள் விடுதி/இல்லங்களைக் கறாராகக் கண்காணிப்பது, பாதுகாப்பை உறுதி செய்வது

தமிழகத்தில் 3500 சத்துணவு மையங்களை மூடும் முயற்சியை முறியடிப்பது, அங்கன்வாடி மையங்களைக் கூடுதலாக உருவாக்குவது

இளைஞர் நலன்

வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்குதல்; வேலை கிடைக்கும் வரை வேலையில்லா கால உதவித்தொகை அளித்தல்

வேலை நியமனத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல்

தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்குதல்

மீனவர்கள் நலன்

மீனவர்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடலோர மேலாண்மை மண்டல அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, கடலோர பகுதிகள் மீதான மீனவர் உரிமையை நிலைநாட்டுதல்.

மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைத்துப் பெண்களையும் மீனவ தொழிலாளர்களாக அங்கீகாரம் செய்து, ஆண்களுக்கு சமமான பயனாளிகளாக அவர்களைக் கருதுவது.

இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்வது, இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது

உள்நாட்டு மீனவர்களுக்கு நீராதாரங்களின் மீன்பிடி குத்தகை வழங்குவதை கட்டாயமாக்குதல், அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்குவதை உறுதிசெய்தல், நிவாரணத்தொகையை ரூ.10000-மாக உயர்த்தி வழங்குதல். கடல் மீனவர்களுக்கு வழங்கப்படும் சமூக நலத் திட்டங்கள் அனைத்தையும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்குவது

தேசிய கடல் மீன்பிடி கொள்கை 2017, நீலபுரட்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால் பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்துவிட்டு, இந்திய பெருங்கடலில் அந்நிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி கொட்டிக்கிடக்கும் மீன்வளத்தைச் சுரண்டுவதைத் தடுத்து நிறுத்துவது, சாகர்மாலா போன்ற பெரும்திட்டங்களின் பெயரால் கடலூர்-நாகை கடற்கரைப்பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம், குமரி மாவட்டத்தில் கோவளம் மணக்குடி துறைமுக திட்டம் போன்ற நடவடிக்கைகள் கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதை மாற்றி அமைப்பது

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 1991-யை அடிப்படையாக கொண்டு முழுமையான கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தை கடலோர சமுக மக்களிடம் கலந்து பேசி புதிய திட்டத்தை உருவாக்கி அதை தமிழில் வெளியிடுவது

மாற்று வாழ்வாதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்புத்திட்டத்தை முறையாக அமல்படுத்த போதிய நிதியை ஒதுக்கீடு செய்து அதிகபட்சமாக இரண்டு வருடத்திற்குள் நிறைவேற்றுவது , மீனவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை பாதுகாக்க அமைக்கப்பட்ட முராரி கமிட்டி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, மத்தியில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்குவது

நாடு முழுவதும் உள்ள அனைத்து மீன்பிடி படகுகளுக்கும்,தேவையான அளவு முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவது, தமிழ்நாடு அரசு உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகை விடுவதை தவிர்த்து, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது 

தலித் மற்றும் பழங்குடியினர் நலன்

பா.ஜ.க ஆட்சியில் துணைத்திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஜாதவ்குழு பரிந்துரைகள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு கிடைக்கக் குரல் கொடுப்பது

ஒதுக்கீடு செய்யப்படும் முழுத்தொகையும் நேரடியாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களின் தனிநபர், குடும்பம், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் நேரடியாக பயன்படக் கூடிய விதத்தில் திட்டங்கள் வகுப்பது, இந்நிதியைப் பொது திட்டங்களில் முதலீடு செய்வதை முற்றாக தடுப்பது, இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய சட்டம் இயற்றப்படுவது

நிலமற்ற தலித் பழங்குடியினர் குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கர் விவசாய நிலம் வழங்குவது

வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டம் 2015ஐ செம்மையாக அமல்படுத்துவது; அரசியல் சாசன அட்டவணை 9ல் இதை இணைப்பது

குக்கிராமங்கள் துவங்கி உயர்கல்வி நிலையங்கள் வரை அநீதியான முறையில் தொடர்கிற சமூக, பொருளாதார, பண்பாட்டு பாகுபாடுகளுக்கு முடிவுகட்ட சட்டப்படியாகவும், மக்கள் மத்தியில் ஜனநாயக உணர்வை வளர்ப்பதின் வழியாகவும் சகோதரத்துவத்தை பாதுகாத்து தீண்டாமை கொடுமையை ஒழித்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது, அரசு சார்பில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொள்வதுn சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை உடனடியாக வெளியிடுவதுn சாதிஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது, வெவ்வேறு சாதியில் திருமணம் செய்யும் தம்பதியரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட குரல் கொடுப்பது

மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வுச்சட்டத்தை (2013) உறுதியாக செயல்படுத்துவது

பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுn மத்திய வன உரிமைச் சட்டம் 2006 தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்டு ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்க உரிய நடவடிக்கைகளை எடுப்பது, பழங்குடியினரையும், பாரம்பரியமாக வன நிலங்களில் குடியிருப்போரையும் வெளியேற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்ள முறையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது

பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு உரிய சாதிச்சான்றிதழ் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதுn மலைப்பகுதிகளில் பட்டா வழங்கிட தடை செய்யும் அரசு ஆணை எண் 1168-ஐ ரத்து செய்திட வற்புறுத்துவதுn வேட்டைக்காரன் இனம் குறித்த ஆய்வை பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் தாமதமில்லாமல் துவங்குவது

பழங்குடி மக்கள் வசிக்கும் மலைகிராமங்களுக்கு பள்ளி, மருத்துவம், குடிநீர், மின்சாரம், சாலை வசதிகளை ஏற்படுத்துவது.

சிறுபான்மையினர் நலன்

சிறுபான்மை ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிப்பது

சிறுபான்மை மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக சச்சார் குழு மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது

மதம் மாறிய தலித் மக்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் தூண்டி வரும் மத வன்முறைகளை ஒடுக்கவும், வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது, வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்றுவது

சிறுபான்மை தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட நடவடிக்கை எடுப்பதுn இசுலாமிய சிறுமியருக்குக் கல்வி அளிக்க சிறப்பு கவனம்; கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகளை அதிகரிப்பது

சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுவதைத் தடுக்கவும், அவர்கள் மீது நடைபெறும் மத ரீதியான வன்முறைகளைத் தடுத்து உரிய பாதுகாப்பு வழங்கவும் சம உரிமை ஆணையம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்துவதுn உருது ஆசிரியர் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்து, உருது பயிலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர முயற்சிப்பதுn முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்பது, பட்டா நிலங்களில் வழிபாட்டு தலங்கள் அமைக்க சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் உடனடியாக பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு, உரியகாலத்தில் அனுமதி வழங்கப் படுவது

ஏழை முஸ்லீம்கள் வாழும் பல பகுதிகளில் பொருத்தமான வகையில் புறம்போக்கு நிலங்களை ஒதுக்கீடு செய்து இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய கபர்ஸ்தான் அமைக்க அரசை வற்புறுத்துவதுn தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடுகிற முஸ்லீம் சிறை கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும், பல்லாண்டுகளாக விசாரணைக் கைதிகளாக தொடர்ந்து பிணை கூட வழங்கப்படாமல் நீதிக்குப் புறம்பாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யவும் அரசை வற்புறுத்துவது 

பிற்படுத்தப்பட்டோர் நலன்

மத்திய கல்வி நிலையங்களில் 27 சதவிகித ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, தனியார் கல்வி நிலையங்களுக்கு விரிவுபடுத்துவது

தேசிய பிற்பட்டோர் ஆணையத்தை வலுப்படுத்துவதுn சாதிச் சான்றிதழ் வழங்குவதை எளிமைப்படுத்துவது

பிற்பட்டோரில் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றை உறுதிப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள்செய்வது

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலன்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படுவது

சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டம் சார் ஊழியர்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியர்களுக்குக் கால முறை ஊதியம் நிர்ணயிப்பது,

நிரந்தர அரசு பணிகளை காலி செய்யும் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்வது; இதற்கு வழி வகுக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்வதோடு, ஆதிசேஷையா தலைமையில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை நிராகரிப்பது

மாற்றுத்திறனாளிகள் நலன்

பாகுபாடு பார்ப்பதை தடை செய்யும் அரசியல் சாசன பிரிவு 15(1)ல் “ஊனமுற்றோரை” சேர்க்க வலியுறுத்துவது, அதைப்போன்று அரசு பணியமர்த்தலில் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன பிரிவு 16(2)ல் “ஊனமுற்றோரை” சேர்ப்பது

மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா சூழல் உள்ளிட்ட சட்டப்பூர்வ அரசு கடமைகளை செய்ய ஒவ்வொரு துறையும் தனது நிதிச்செலவினத்தில் 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்வது

பொதுக்கல்வித்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி - உள்ளடங்கிய கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்துவது

மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களாக அறிவித்து, அரசுகளின் நலத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிபந்தனையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது

மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசுகளின் அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை, இவர்கள் மீதான் பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் தடுத்திட நடவடிக்கைகள் எடுப்பது

மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது; கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சட்டப்படியான 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வது, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையான சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்குவது; தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விலைவாசி உயர்வுக்கேற்றவாறு உயர்த்தப்பட்டு, தடையின்றி மாதந்தோறும் வழங்குவது

முதியோர் நலன்

முதியோர் உதவித்தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தி மாதந்தோறும் தடையின்றி வழங்குவது

ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு முதியோர் இல்லங்கள் ஏற்படுத்தி, தக்க உறைவிட மற்றும் உடல், மனநல மருத்துவ வசதிகளுடனும், பாதுகாப்புடனும் செயல்படுவதை உறுதிப்படுத்துவதுn தனியார் அமைப்புகள் நடத்தி வரும் முதியோர் இல்லங்களை கண்காணித்து, முதியோர் நலனும், கண்ணியமும் காக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுப்பது 

திருநங்கையர் திருநம்பியர் (திருநர்) நலன்

திருநர் உரிமைகள் மசோதா 2014ஐ சட்டமாக்குதல்; 2018 மசோதாவில் உள்ள குறைபாடுகளைக் களைதல்n 2014 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி திருநம்பியர், திருநங்கையருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டிற்கு குரல்கொடுப்பது

திருநர் சமூகத்தைக் காத்திட “திருநர் பாகுபாடு தடுப்புச் சட்டம்” கொண்டுவருவது

தமிழகத்தில் உள்ள திருநர் நல வாரியத்தை செயல்படுத்துவது, குடியிருப்பு, ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்வது

இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சை, குடும்பங்களுக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது

கீழடி அகழ்வாய்வு

கீழடி அகழ்வாய்வை மத்திய தொல்லியல்துறை தொடர்வது, அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் தொன்மையை கண்டறிய முழுமையான, அறிவியல்பூர்வமான ஆய்வு, இதுவரை கிடைத்துள்ள பொருட்களை கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது

1904 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுதான் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் அகழ்வாய்வு என்ற பின்னணியில் 2004 வரை தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு தற்போது வரை 4 தொகுதிகளாக தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை உடனடியாக வெளியிடுவது, தமிழகத்தில் அகழ்வாய்வு நடத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு தொடர்வது

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படுவது, மேலும் தனியார் துறையில் இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் வலியுறுத்தப்படுவது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவது

பின்னடைவு காலி பணியிடங்களைப் பூர்த்தி செய்வது

நாட்டுப்புறக் கலைகள்

நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திட, வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவது, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலை பட்டப்படிப்பை நிறுவுவது , நலிவடைந்த நாட்டுப் புற கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது

நாட்டுப்புறக் கலை பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது 

கட்டற்ற மென்பொருள்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி வழி கல்வியை மேம்படுத்துவது, மாணவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கப்படுவது

கட்டற்ற மென்பொருள், அது சார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் முனைவோருக்குக் கூடுதல் உதவி அளிப்பது

ஓலா, உபேர் ஓட்டுநர்களுக்குத் தொழில்நுட்ப முறையில் உழைப்பாளர் கூட்டுறவை உருவாக்குவது

சொமாட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு வேலை நேரம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பது

அரசுடமையாக்கப்பட்ட நூல்கள், அரசு நூலக புத்தகங்களை அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் டிஜிட்டல் நூலகத்தில் வெளியிடுவது, நூலகங்களை அதிகப்படுத்துவதோடு, நூல்கள் வாங்குவதற்கான நிதியை அதிகரிப்பது

சமூக வலைத்தளம்

சமூகவலைத்தளங்களில் தனிநபர் சுதந்திரம், உரிமை, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுப்பது; அதே சமயம் போலி செய்திகள், அச்சுறுத்தல்கள் மூலம் சமூக பதற்றத்தைத் தூண்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது

வலைத்தளம் சார்ந்த பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்முறையைத் தடுக்க சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்தி, விரைவாகவும், பாகுபாடு இன்றியும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வது

விளையாட்டுத் துறை

திறமையான ஆண்/பெண் விளையாட்டு வீரர்களை நகரங்கள் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் சிறுவயதிலேயே அடையாளம் கண்டு, அரசே முழு செலவுகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரப் பயிற்சி கொடுப்பது

வீரர்கள் ஒவ்வொருவரும் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருவதற்கான செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்பது

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வந்தாலும், மாநில அரசுகளும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்துவது

விளையாட்டு பல்கலைக்கழகங்களின் கீழ் அரசு கல்லூரிகளை உருவாக்கி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுப்பது

அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டிருக்கும் விளையாட்டு மைதானங்களின் உள்கட்டமைப்பை நவீன வசதிகளுடன் விரிவுபடுத்துவது

விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்புகள் அனைத்து விளையாட்டுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது

போக்குவரத்து

தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் வசூலிக்கப்படும் மெட்ரோ ரயில் கட்டணம் போல் சென்னையிலும் குறைவான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பது, மேலும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு மாதாந்திர பாஸ் வழங்கிட குரல் கொடுப்பதுn கோவை, மதுரை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தைக்கொண்டுவருவது

போதுமான ரயில்களைத் தமிழகத்துக்கு விடுவதுn மாநில போக்குவரத்துத் துறை, சேவைத் துறை என்ற அடிப்படையில், நஷ்டம் ஏற்பட்டால் ஈடுகட்ட அரசு உதவுவது


மத்தியில் அமைந்த மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அனைத்து ஜனநாயக, அரசியல் சாசன கட்டமைப்புகளையும் தகர்த்துள்ள நிலையில் அவற்றை புனரமைப்பதும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களை நிலைநிறுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவது அவசியமாகும். மோடி அரசினால் முட்டுக் கொடுக்கப்படும் தமிழக அதிமுக அரசும் அனைத்து வகையிலும் மக்களுக்கு தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளது.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், முன் வைக்கும் மாற்றுத் திட்டங்களுக்கும் தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

;