திங்கள், ஜனவரி 18, 2021

election-2019

தினமலர் அவதூறு செய்திக்கு மறுப்பு


திருப்பூர், மார்ச் 26 -

திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி குறித்து தினமலர் நாளிதழில் அவதூறு செய்தி வெளியிட்டதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாயன்று தினமலர் நாளிதழ் திருப்பூர் செய்தியில், காற்று வாங்கும் திமுக கூட்டணி ஆபீஸ் என்று தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் கூட்டணிக் கட்சியின் செயல்வீரர்களை அவர் சந்தித்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 36, 37ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தாராபுரம் சாலை சரவண மஹால் எதிரில் நடத்தப்பட்டது. இந்த கூட்டம் முடிந்தபின், தேர்தல் ஆணைய விதிமுறைக்கு ஏற்ப மேஜை நாற்காலிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆனால் இதை மேற்கண்டவாறு அவதூறு பரப்பும் விதத்தில் தினமலர் நாளிதழ் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. நடந்த உண்மை செய்தியை தினமலர் வெளியிட வேண்டும் என்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் ப.கு.சத்தியமூர்த்தி கடிதம் அனுப்பி இருக்கிறார்.

;