"ஒன்றியத்தில் ஒளிந்திருக்கிறதா பிரிவினை சிந்தனை?" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது தினமலர். அந்த வார்த்தையை மோசமானதாக, பயன்படுத்தக் கூடாத, அச்சத்திற்கும், ஆபத்துக்கும் உரிய வார்த்தையாக கட்டமைப்பதற்கு படாதபாடு பட்டுள்ளது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் நியாயத்தை எந்த வகையிலும் மறுக்க முடியாது என்று நன்றாகத் தெரிந்தும், பொருத்தமில்லாத காரணங்களை சொல்லி அந்த வார்த்தையை நிராகரிக்க துடியாய் துடித்துள்ளது.