education

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 1... விண்ணப்பித்து விட்டீர்களா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் முதன்மையான தேர்வான குரூப் 1 தேர்வுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட்டது.துணை கலெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிக்கான இந்த குரூப் 1 தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று அடிப்படைகளில் நடைபெறுகிறது. 

காலியிடங்கள்: மொத்தம் 69 

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500,

குரூப் 1 தேர்வின் தொடக்க நிகழ்வான முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஜனவரி 20-ஆம் தேதி முதல் வெளியிட்டது.  

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 19-ஆம் தேதி 

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: பிப்ரவரி 21-ஆம் தேதி 

முதல்நிலை தேர்வு நாள்: ஏப்ரல் 5-ஆம் தேதி 

தேர்வு கட்டணம்: ரூ.100 (SC/ST மற்றும் இடஒதுக்கீடு உள்ள மாணவர்களுக்கு கட்டணத்தில் விலக்கு) 

கவனம்: மற்ற தேர்வுகளை போல் அல்லாமல் குரூப் 1 தேர்வுக்கு உயரம், எடை, மார்பின் சாதாரண அளவு, விரியும் நிலை (ஆண்களுக்கு மட்டும்)  அளவுகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பப் படிவத்தை கவனமாக படித்து அதற்கேற்றாற் போல விண்ணப்பிக்க வேண்டும்.  

கல்வித்தகுதி, தேர்வு திட்டம், வயது வரம்பு, பாடத்திட்டம் உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு காண www.tnpsc.gov.in www.tnpsc.exams.net www.tnpsc.exams.in ஆகிய இணையதளங்ககளை காணவும். 

எச்சரிக்கை: தற்போது தமிழகத்தில் டாப் டிரெண்டிங் செய்தியாக வலம் வருவது குரூப் 4 முறைகேடு விவகாரம் தான். ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மற்றும் அங்கு பயின்ற நபர்கள் 99 பேர் தகுதி நீக்கம் (வாழ்நாள்) செய்யப்பட்டுள்ளதால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தேர்வாளர்கள் விண்ணப்பம், தேர்வு மையம் மற்றும் இதர நடைமுறைகளில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றம் குரூப் 1 தேர்வு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அன்பர்கள் விதிமுறைகளை கவனமாக, எச்சரிக்கையுடன் படித்த பின்பு விண்ணப்பிக்க வேண்டும்.

;