education

img

DRDO-வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 290

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் DRDO-வில் உள்ள 290 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Scientist ‘B’/ Engineer ‘B’/ Executive Engineer
மொத்த காலியிடங்கள்: 290 (Scientist ‘B’/ Engineer ‘B’ - 286, Executive Engineer - 4).
சம்பளவிகிதம்: ரூ.56,100 - 80,000
வயதுவரம்பு: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி விபரம் வருமாறு:
1. பணியின் பெயர்: Electronics & Communication Engineering 
காலியிடங்கள்: 86
2. பணியின் பெயர்: Mechanical Engineering 
காலியிடங்கள்: 67
3. பணியின் பெயர்: Computer Science & Engineering 
காலியிடங்கள்: 52
4. பணியின் பெயர்: Chemical Engineering 
காலியிடங்கள்: 14
5. பணியின் பெயர்: Electrical Engineering 
காலியிடங்கள்: 15
6. பணியின் பெயர்: Aeronautical Engineering 
காலியிடங்கள்: 14
7. பணியின் பெயர்: Metallurgy 
காலியிடங்கள்: 12
8. பணியின் பெயர்: Civil Engineering 
காலியிடங்கள்: 12
9. பணியின் பெயர்: Instrumentation Engineering 
காலியிடங்கள்: 1
10. பணியின் பெயர்: Textile Engineering 
காலியிடங்கள்: 1
11. பணியின் பெயர்: Production/ Industrial Production Engineering 
காலியிடங்கள்: 1
மேற்கண்ட அனைத்து துறைகளுக்குமான கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்று GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர்: Chemistry 
காலியிடங்கள்: 5
13. பணியின் பெயர்: Physics 
காலியிடங்கள்: 4
14. பணியின் பெயர்: Mathematics 
காலியிடங்கள்: 3
15. பணியின் பெயர்: Material Science 
காலியிடங்கள்: 1
16. பணியின் பெயர்: Geology 
காலியிடங்கள்: 1
17. பணியின் பெயர்: Food Science 
காலியிடங்கள்: 1
12 முதல் 17 வரையுள்ள துறைகளுக்கான கல்வித்தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: மேற்கண்ட துறைகளுக்கான கல்வித்தகுதியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் Descriptive எழுத்துத் தேர்வு GATE தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Descriptive எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: October, 2019.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/ SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rac.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த வுடன் படிவத்தை  பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 14.8.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;