Airport Authority of India-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Screener
காலியிடங்கள்: 419
சம்பளவிகிதம்: ரூ.25,000 - 30,000
வயதுவரம்பு: 15.11.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் காலியிடம் ஏற்பட்டுள்ள நகரத்தின் உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். நகரங்கள் வாரியான காலியிட விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை “AAI Cargo Logistics and Allied Services Company Ltd” என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுக்க வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.aaiclasecom.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Joint General Manager(HR), AAI Cargo Logistics and Allied Services Company Limited, AAI CLAS Complex, Delhi Flying Club ROAD, Safdarjung Airport, New Delhi - 110 003.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 9.12.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.