இந்தியாவில் செயல்பட்டு வரும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என யு.ஜி.சி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
தில்லியில் உள்ள அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், வணிக பல்கலைக்கழகம் லிமிடெட், தர்யாகஞ்ச் கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம், அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்), ஏடிஆர்-மைய ஜூரிடிகல் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களும், உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஹிந்தி வித்யாபீடம், எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம், பாரதிய சிக்ஷா பரிஷத் உள்ளிட்ட 4 பல்கலைக்கழகங்களும், இதே போல் மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்றும், பட்டம் வழங்குவதற்கான அதிகாரம் அவைகளுக்கு கிடையாது என்றும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.