education

img

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2025-206ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18-26 வரை நடபெறவிருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும். அதேபோல் அரையாண்டு டிசம்பர் 15-23 வரை நடபெறவிருக்கிறது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்