education

img

ஆங்கிலம் கற்பது எளிதே

தேர்வு வைத்திருந்தோம் அல்லவா? அந்தத் தேர்வுக்கு சிலர் வாட்ஸ்அப் மூலமும், சிலர் கடிதங்களும் அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து வாசித்து, அதில் எழுதியுள்ளதைப் போல முறையாகப் பயிற்சி செய்தால், தேர்வு எழுதுவது எளிது. நாம் எந்த அளவிற்குக் கற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பு.

பவித்ரா என்பவர் பல சரியான விடைகளை எழுதியிருந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிடல் காஸ்ட்ரோவும் மிக அழகான கையெழுத்தில் பல சரியான விடைகளை எழுதியிருந்தார். பலர் பொதுவான சில தவறுகள் செய்திருந்தனர். அவை என்ன என்று பார்க்கலாம்.
    Singular    Plural
    ஒருமை    பன்மை
    Box    Boxes
    Fox    Foxes
    Goose    Geese
    Tooth    Teeth
    Pen    Pens
    Pencil    Pencils
Singular வார்த்தைக்கு Plural தெரியவில்லை என்றால் Dictionary யை எடுத்துப் பார்த்தாலே போதும். அதில் Plural குறிப்பிடப்பட்டிருக்கும். நிறைய வார்த்தைகளில் Spelling Mistake இருந்தது. இதை எப்படி சரி செய்து கொள்வது என்பது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

முக்காலி என்றால் Stool. சில சொற்களுக்கு நமக்கு ஆங்கில வார்த்தை தெரியாவிட்டால் தமிழ் – ஆங்கில அகராதியைப் புரட்டி பார்த்தால் போதும் தெரிந்துவிடும்.
நிறைய வார்த்தைகளை எழுதும் போது சிலவற்றுக்கு Capital Letter பயன்படுத்த வேண்டும். உதாரணம்: English, England. நாடுகள், மொழிகள் போன்றவற்றின் பெயர்களை எழுதினால் முதல் எழுத்து Capital letter ல் தான் இருக்க வேண்டும். அதே போல் மனிதர்களின் பெயர்களை எழுதினால் முதல் எழுத்து Capital letter தான் இருக்க வேண்டும்.
Josephine
Kala
Vishal
Mukesh
Muneera
Jalaja

இவ்வாறு முதல் எழுத்து Capital letter பயன்படுத்த வேண்டும். வாக்கியங்களைத் துவங்கும் போதும் முதல் எழுத்து Capital letter.
Our appreciation is all.
Castro has written very neatly and legibly. 
Theekkathir and I wish you all a very happy weekend.

I என்ற எழுத்து நான் என்பதைக் குறிக்கும் வகையில் எங்கே வந்தாலும் அது Capital letter ஆகத்தான் இருக்க வேண்டும்.
தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடர்ந்து படியுங்கள். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அடுத்த தேர்வு. நீங்கள் ஒவ்வொருவரும் தவறுகள் ஏதுமில்லாத, எளிமையான sentences பயன்படுத்தக் கற்றுக் கொள்ள எழுத்துக்களையும், வார்த்தைகளையும் பற்றித் தெரிந்து கொள்வதே முதல்படி அதில் தேறிவிட்டீர்கள். 
வாழ்த்துக்கள்.
 

;