education

img

என்.சி.இ.ஆர்.டி ஆங்கில பாட புத்தகங்களில் இந்தியில் தலைப்பு!

என்.சி.இ.ஆர்.டி-இன் ஆங்கில வழி பாட புத்தகங்களின் தலைப்புகள் இந்தி பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 
ஒன்ரிய பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, அரசு அலுவலகங்கள் முதல் கல்வி நிலையங்கள் வரை இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்சி ஆங்கில வழி பாட புத்தகங்களின் தலைப்புகள் இந்தி பெயர்களில் மாற்றப்பட்டது. 
சிபிஎஸ்சி 6-ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்திற்கு 'பூர்வி' என்றும், கணித புத்தகத்திற்கு 'கணித பிரகாஷ்' என்றும், 1,2-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களுக்கு 'மிருதங்' மற்றும் 3-ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களுக்கு 'சந்தூர்' என்றும் இந்தி பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது; கண்டனங்களும் எழுந்து வருகிறது.
கேரள கல்வித்துறை அமைச்சர் கண்டனம்:
"பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் இருந்த பாட புத்தக தலைப்பை, இந்தியில் மாற்றுவது என்பது அடிப்படை அறிவற்றது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையிலான கலாசார திணிப்பாகும். இதனை என்.சி.இ.ஆர்.டி திரும்பப் பெற வேண்டும்."
சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்:
"ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி! ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி!என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி-களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா?"
இவ்வாறு அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.