இனி Future Tense
I + will + root verb
We + will + root verb
They + will + root verb
You + will + root verb
He + will + root verb
She + will + root verb
It + will + root verb
ஐந்து நிமிடம் கழித்தானாலும் அல்லது ஐந்து வருடத்திற்குப் பிறகானாலும் சரி ‘இனி’ என்றால் அது Future தான்.
I will go to moon.
He will feed his baby on time.
She will take good care of her parents.
They will purchase a printing machine.
You will definitely speak English in another six months.
We will teach you till you understand.
We will always help you.
இதுபோன்ற பல வாக்கியங்களை நீங்கள் அமைத்துப் பார்க்கலாம்.
Future Tenseக்கும் Negative உண்டு. Negative என்றால் not என்ற வார்த்தையை add செய்து கொள்ள வேண்டும். அவ்வளவே.
I will not tell lies.
She will not get promotion.
He will not think about her.
நான் பொய் சொல்ல மாட்டேன். அவளுக்கு promotion கிடைக்காது. அவன், அவளைப் பற்றி நினைக்க மாட்டான். மாட்டேன், மாட்டான், கிடைக்காது, செய்யாது, வராது, போகாது, மாட்டார்கள் என்றெல்லாம் Negative ஆக Sentence சொல்லும்போது not பயன்படுத்த வேண்டும்.
I will not tell lies. என்பது Negative sentence.
I will tell the truth என்பது positive sentence.
I will tell lies என்பதும் positive sentence தான்.
வாக்கியத்தில் not இருக்கிறதா இல்லையா என்பதை வைத்துத்தான் positive sentence ஆ அல்லது negative sentence ஆ என்பதை முடிவு செய்ய வேண்டும். Not என்ற சொல் இருந்தால் negative sentence. Not என்ற சொல் இல்லையென்றால் positive sentence. அந்த வாக்கியத்தின் meaning பற்றியெல்லாம் யோசித்து confuse ஆக வேண்டாம்.
Sankar will confuse everybody.
Seema will not confuse anyone.
Geetha will not cheat others.
Seetha will cheat others.
சங்கர் எல்லாரையும் confuse செய்வார்.
சீமா யாரையும் confuse செய்யமாட்டார் (தமிழில் மாட்டாள் என்றும் சொல்லாம்)
Geetha மற்றவர்களை ஏமாற்ற மாட்டாள்.
சீதா மற்றவர்களை ஏமாற்றுவாள்.
Geetha ஏமாற்றமாட்டாள் என்பது positive ஆன செய்தி. ஆனால் sentenceஐப் பொறுத்தவரை அது negative sentence தான்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், Geetha will not cheat others என்பது Geetha பற்றி positive தகவலைச் சொல்கிறது. ஆனால் அது negative sentence.
Seetha will cheat others என்பது Seetha பற்றி negative தகவலைச் சொல்கிறது. ஆனால் அது positive sentence.
See
Watch
Drink
Roll
Sit
Turn
Ride
Try
Brush
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்களை வைத்து future tense positive மற்றும் negative sentence களை எழுதுங்கள். எழுதும்போதும், எழுதிய பின்னரும் வாய்விட்டுப் படிக்க வேண்டும். அதற்கான structure ஐ அருகில் வைத்துக் கொண்டு நாம் எழுதியது சரிதானா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
இதுவரை நீங்கள் படித்துள்ள structureகளை வைத்து sentenceகளை எழுதியவற்றை வண்ணக்கதிர் வாட்ஸ்அப் எண்ணுக்கு (9498379729) அல்லது மின்னஞ்சலுக்கு vannak
kathir@gmail.com அனுப்பலாம்.