இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் DRDO -ல் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள் : 1817 (UR-849, OBC-503, EWS-188, SC-163, ST-114)
சம்பளவிகிதம் ; ரூ.18000 - 56000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் .
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, விசாகப்பட்டினம். எழுத்துத் தேர்விற்கான Admit Card - ஐ கீழ்கண்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் தொடர்பான விபரங்கள் DRDO இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ ESM மற்றும் பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.1.2020 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.