education

img

தமிழ்நாட்டில் குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை தொடக்கம்!

சென்னை,டிசம்பர்.09- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மை தேர்வு நாளை(டிச.10) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடும் கட்டுப்பாடுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
இதன்படி தேர்வுக் கூடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும். தேர்வுக் கூடத்திலோ அல்லது தேர்வு மைய வளாகத்திலோ, தேர்வு கண்காணிப்பாளர்களிடமோ அத்துமீறும் செயல்கள் எதிலும் தேர்வர்கள் ஈடுபடக் கூடாது. கைப்பேசிகள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடர்புக்கான கருவிகள் உள்பட அனைத்து நவீன தொலைத்தொடர்புக் கருவிகளும் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.