education

img

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு

Western Railway-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Sports Persons(Western Railway)

காலியிடங்கள்: 21

சம்பளவிகிதம்: ரூ.19,900 - 92,300

வயதுவரம்பு: 1.1.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவில் சர்வதேச/ தேசிய/ மாநில/ பல்கலைக் கழக அளவில் விளையாடி குறைந்தபட்சம் 3-ம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் கல்வித் தகுதி, விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.(பெண்கள்/ Minorities/ SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.250). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.rrc-wr.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.9.2019